×

நிக் ஜோனஸுடன் விவாகரத்தா? வதந்தி என விளக்கமளித்த பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனஸ் பார்ட்டி ஒன்றில் சந்தித்தபிறகு டேட்டிங் செய்யத் தொடங்கினர். அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடந்தது. சந்திப்பு, காதல், திருமணம் எல்லாமே அவசர கோலத்தில் நடந்த நிலையில் தற்போது இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு தயாராகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
இதுபற்றி லண்டன் பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருக்கும் செய்தி திரையுலகினருக்கு ஷாக்காக அமைந்திருக்கிறது.

திருமணத்துக்கு முன்பாக இணைபிரியாத காதல் ஜோடிகளாக வலம் வந்த பிரியங்கா, நிக் ஜோனஸ் திருமணம் ஆகி சரியாக 117 நாட்கள் கடந்த நிலையில் கருத்து வேறுபாடில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் பிரியங்கா, நிக் இடையே மோதல் ஏற்படுகிறது. வேலை, பார்ட்டிக்கு செல்வது, இருவரும் ஒன்றாக பொழுதை கழிப்பது என எந்த விஷயமாக இருந்தாலும் இவர்களுக்கு ஒத்துப்போகவில்லை. குறிப்பாக பிரியங்காவை தனது கட்டுப்பாட்டில் நிக் ஜோனல் வைத்திருக்க முடியவில்லை.

திருமணத்துக்கு முன்னதாக பிரியங்கா சோப்ரா மிகவும் சாந்தமானவர், எளிதாக அவரிடம் வாழ்க்கை நடத்தலாம் என்று நிக் ஜோனஸ் எண்ணினார். திருமணத்துக்கு பிறகுதான் பிரியங்காவின் கோபக்கார குணம் வெளிப்பட்டது. அவரது போக்கு நிக் ஜோனஸ் குடும்பத்தினருக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரியங்கா சோப்ரா பக்குவம் அடைந்தவர். அதனால் திருமணத்துக்கு பிறகு குழந்தைபெற்றுக்கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்துவார் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அவர் விளையாட்டுத்தமானவர் என்பதும், 36 வயது ஆகியிருந்தாலும் இன்னும் 21 வயது பெண்போல் பார்ட்டி செய்துகொண்டு ஜாலியாகவே இருக்க எண்ணுவதாகவும் நிக்கின் குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து பிரியங்காவை விவாகரத்து செய்யும்படி நிக்கிடம் குடும்பத்தினர் யோசனை கூறியிருக்கிறார்கள். இதனால் இருவரும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்று லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான் என்று பிரியங்கா சோப்ரா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக்ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Tags : Nick Jonas ,Priyanka Chopra ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்